ஜெ., தீர்ப்பு தேதி : எப்போது வேண்டுமானாலும் வெளியாகும்

கர்நாடக அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகனின் மனு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டாலும், அது ஜெ., மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பாதிக்காது என கூறப்படுகிறது.
தீர்ப்பு தேதியை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமியே முடிவு செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி.லோகூர், பானுமதி அடங்கிய பெஞ்ச் அறிவுறுத்தி உள்ளதால் ஜெ., வழக்கின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.



ஜெ., மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து கர்நாடக அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் நீதிபதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்பழகனின் மனுவை 3 பேர் கொண்ட வேறொரு பெஞ்சுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே சமயம் ஜெ., மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எப்போது வழங்குவது என்பது குறித்து கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமியே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஜெ., மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது.



முதல் சிக்கல் : சுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் மனு நிலுவையில் உள்ளதால், அதன் பிறகு ஜெ., வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என நீதிபதி குமாரசாமி முடிவு செய்யும் பட்சத்தில், முதலில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும். அதன் பிறகு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு, குழு அமைக்கப்படும். அவர்கள் மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். இதனால் ஜெ., வழக்கின் தீர்ப்பும் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அன்பழகனின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்து பவானி சிங் நீக்கப்பட்டால் புதிய வக்கீல் நியமிக்கப்பட்டு, வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும். அதன் பின்னரே ஜெ., வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.



2 வது சிக்கல் : ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ஏப்ரல் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஜாமினை மேலும் நீட்டிக்க வேண்டும் என ஜெ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்று, ஜெ.,வின் ஜாமினை சுப்ரீம் கோர்ட்டும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அரசு வழக்கறிஞர் சிக்கல் தீர சில மாதங்கள் ஆக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஜெ., மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையாவிட்டால், ஜெ., வழக்கின் தீர்ப்பை குமாரசாமியால் வழங்க முடியாது. புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் ஜெ., மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...