ஆசிரியைகளுக்கான உடை அமைப்பை சீர்படுத்த கோரிக்கை...!

ஆசிரியைகளுக்கான உடை அமைப்பை சீர்படுத்தக் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓவிய ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நல்ல காசிராஜன், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

பள்ளி மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்தவும், வகுப்பறையில் தவறான எண்ணங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், ஆசிரியைகளின் உடை அமைப்பினை சீர்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் தவறான அணுகுமுறையில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், மருத்துவர்கள்மற்றும் வழக்குரைஞர்கள் அணியும் மேலங்கி போன்ற ஆடை வடிவமைப்பை ஆசிரியைகளுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...