இனி இரண்டு சனிக்கிழமை வங்கி விடுமுறை !

வங்கி ஊழியர்களின் பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.



கடந்த ஒரு வருடமாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 வேலைநாட்கள் போன்ற காரணங்களுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிப்பதாக வங்கி அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது..இதர சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...