மேல் படிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் தற்போதே விண்ணப்பித்து சாதி, வருவாய் உட்பட வருவாய்துறையின் சான்றிதழ்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் சாதி, வருவாய், பிறப்பிடம்,
முதற்பட்டதாரி , கணவரால் கைவிடப்பட்ட பெண் போன்ற சான்றுகள் கலெக்டர், தாசில்தார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிலவள வங்கிகள், வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றில் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 10,12 தேர்வு எழுதி மேல் படிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான சான்றுகள் தேவைப்படும்.
இவர்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்போது சான்றுகள் கோரி விண்ணப்பங்கள் கொடுத்து பெற்றுகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது, நீக்கம் செய்வது ,வாக்களார் பட்டியல் பதிவுகளை திருத்தங்கள் செய்ய வாக்கு சாவடி, தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இணையதளம் வாயிலாகவும் இவற்றை பதிவு செய்யலாம். பொது இ-சேவை மையங்களில் 10 ரூபாய் கட்டணத்தில் இவற்றை பதிவுசெய்து கொள்ளலாம்.