"போராட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது"...

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது என, கோவை மாவட்ட தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

சத்துணவு பணியாளர்களின், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 15 முதல், சத்துணவு மையங்களை மூடி, காலவரையற்ற போராட்டங்களை துவக்கவுள்ளதாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது.
அடிப்படை ஊதியத்தை உயர்த்துதல், ஓய்வூதியம், பணி கொடை அதிகரித்தல், உணவு படி அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் சங்கம் சார்பில் நடக்கவுள்ள போராட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது எனவும், பிரச்னைகளுக்கு போராட்டங்கள் மட்டும் தீர்வல்ல; முறையாக அரசை அணுகி பிரச்னைகளை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளோம் என, மாவட்ட தலைவர் செல்வகுமார் அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...