தமிழகத்தில் காலியாகவுள்ள 1,241 குரூப் 2 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 29- ஆம் தேதி கடைசியாகும்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்ட தேர்வு அறிவிக்கை விவரம்:
வணிக வரித் துறை துணை அதிகாரி (8 பணியிடங்கள்), சார் பதிவாளர் (23 பணியிடங்கள்), வருவாய் உதவியாளர் (618 பணியிடங்கள்) உள்பட குரூப் 2 தொகுதியில் மொத்தம் 1,241 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணிகளுக்கு இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தேர்வுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தின் (www.tnpscexams.net) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 29 ஆகும்.
வங்கி, அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக் கட்டணம்-தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூன் 1 கடைசி நாள்.
கல்வித் தகுதி: முதல்நிலைத் தேர்வானது ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும்.
இந்தத் தேர்வு என்பது கொள்குறி வகை என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வினை எதிர்கொள்ள ஏதாவது ஒரு இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.75. முதல்நிலைத் தேர்வின் போது பொது அறிவுடன், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வானது 114 மையங்களில் நடைபெறவுள்ளன.
முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கான பாடத் திட்டம்-தேர்வுத் திட்டம் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.