அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடல் !

கோவையில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டதாக, 14 தனியார் பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள், மூடப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளில், 93 பள்ளிகள் அங்கீகாரம் பெறாத காரணத்தால் மூடப்பட்டு உள்ளன. நடப்பு கல்வியாண்டில், 319 பள்ளிகளுக்கு முதற்கட்டமாக, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்பும், அங்கீகாரம் பெற முயற்சிக்காமல் இருந்த, 14 பள்ளிகள் மூடப்பட உள்ளதாகவும், சிறு குறைபாடுகளுடன் அங்கீகாரம் புதுப்பிக்காமல் உள்ள, 18 பள்ளிகளுக்கு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...