டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இரண்டு கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்புக்கு கட்-ஆப், 100 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மற்ற மாநிலங்களில் சிறந்த கல்லூரிகளில் எங்குமே 100 சதவீத மதிப்பெண் கட்-ஆப்-ஆக
நிர்ணயிக்கப்படுவதில்லை. ஏனெனில் மாணவர்கள் அவ்வளவு மதிப்பெண் பெறுவதில்லை. ஆனால் டில்லி பல்கலைக்கு உடப்பட்ட சிறந்த கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டுமானால் 100 சதவீத கட்-ஆப் வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே 3 ஆண்டுகளாக இருந்த இந்த நிலைமை இந்த ஆண்டும் தொடர்கிறது.
டில்லி தொழிற்படிப்பு கல்லூரி, இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு கட்-ஆப் 100 சதவீதம். ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் கட்-ஆப் 99 சதவீதம்.
ஹன்ஸ்ராஜ் கல்லூரி, ராம்லால் ஆனந்த் போன்ற கல்லூரிகளில் கட்-ஆப் 97யை தாண்டுகிறது.
பொருளாதாரத்திற்கு கிராக்கி: தமிழகத்தில் கழித்துக் கட்டப்பட்ட பட்டப்படிப்பாக கருதப்படும் "பொருளாதாரம்', டில்லியில் கடும் கிராக்கியை பெற்றுள்ளது. இந்து, ஹன்ஸ்ராஜ், இந்திரபிஸ்தா ஆகிய கல்லூரிகளில் பி.ஏ., பொருளாாதாரம் படிக்க வேண்டும் என்றால் 98 கட்-ஆப் வைத்திருக்க வேண்டும். பிஏ ஆங்கில இலக்கியம் படிப்புக்கும் 98 சதவீத மதிப்பெண் கட்-ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.