புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மறைமுகமான நுரையீரல் பிரச்சனைகள் இருப்பதை சமீபத்தில் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ குழு ஒன்று, 45ல் இருந்து 80 வயதுக்கு உட்பட்ட , நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கும் நபர்களை பரிசோதித்தது.பரிசோதனை முடிவில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அறியப்பட்டது. ஆனால், மேலும் பரிசோதித்துப் பார்த்ததில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை ஆரம்ப நிலையில் இருந்ததால் கண்டறியப்படாமல் இருந்தன.
நுரையீரல் அடைப்பு:ஆரோக்கியமானவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களில், 20 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் அடைப்பு நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டுபிடித்தனர். அவர்களில் 42 சதவிகிதம் பேருக்கு எம்பிசிமா எனப்படும் சுவாசப் பாதை தடித்தல் நோய் இருப்பது அறியப்பட்டது. 23 சதவிகிதம் பேருக்கு மூச்சுத் திணறல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த குழுவில் இடம் பெற்ற மருத்துவர்கள் கூறுகையில், "இந்த ஆராய்ச்சி முடிவுகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சொந்தக் காரர்களாக தங்களை எண்ணிக் கொள்ளும் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எச்சரிக்கை. உண்மையை உணர்வதன் மூலம் மேற்கண்ட நுரையீரல் அடைப்பு நோய், சுவாசப் பிரச்சனை போன்றவற்றை தடுக்க முடியும் என்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள தேசிய நோய் தடுப்பு பிரிவு, புகைப்பழக்கமே அந்நாட்டின் பெரும்பாலனவர்களின் உயிரைக் குடிக்கும் நோய்களுக்கு காரணமாவதாக தெரிவிக்கிறது.