வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 580 அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஜூன், 28ம் தேதி விளையாட்டுப் பிரிவினர்; 29ம் தேதி மாற்றுத் திறனாளிகள்; ஜூலை, 1ம் தேதி முதல் பொதுக் கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கவில்லை.
இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யவில்லை.வரும், 15ம் தேதி, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். அப்போது, தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்,'' என்றார்.அண்ணா பல்கலை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள் ஒதுக்கப்படும். தனியார் சுயநிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 4 சதவீதம் ஒதுக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...