கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் 10 பேருக்கு 30 மாதங்கள் சம்பளம் வழங்காத அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரூ. 25ஆயிரம் அபராதம் விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த வி. புருஷோத்தமன் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார். மனு விவரம்: மதுரை கூடல்நகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வேளாண் சேவை சங்கத்தில் 29 வருடங்களாகப் பணியாற்றுகிறோம். 2008 ஜூலை முதல் 30 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை. இதுதொடர்பான வழக்கில், எங்களது கோரிக்கையை வேளாண் துறை ஆணையர் மற்றும் வேளாண் பொறியியல் துறை பதிவாளர் பரிசீலிக்க 2011 இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் அவர் எங்களுக்கு ஊதியம் வழங்க மறுத்து கடிதம் அனுப்பியுளார். அதில், கூட்டுறவு சங்கம் என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். அதில் இருந்து வரும் லாபத்தில்தான் சம்பளம் வழங்க முடியும். சம்பளம் அளிக்க முடியவில்லை என்றால் சங்கத்தை கலைப்பதைத் தவிர வேறுவழியில்லை. கூடல்நகர் சங்கத்தில் பணிகள் நடக்கவில்லை. இயந்திரங்களை வாடகைக்கு விடவில்லை. வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே ஊதியம் பெறும் உரிமை கிடையாது. மேலும் தொழிலாளர் நீதிமன்றத்தில்தான் இப் பிரச்னையை ஊழியர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த கடிதத்தை ரத்து செய்து ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மேற்படி சங்கத்தில் ஊழியர்களாக உள்ளனர். அதை தனி அலுவலர் நடத்தியுள்ளார். மனுதாரர்கள் தினமும் பணி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு உள்ளனர். அதனால் ஊதியம் வழங்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு,
தனி அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் மனுதாரர்களுக்கு 30 மாத சம்பள பாக்கியை ஒரு மாதத்தில் வழங்க தனி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
பட்டினி போட்டுக் கொல்வதற்குச் சமம்
கூட்டுறவுச் சங்கத்தில் மனுதாரர்கள் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு பணி வழங்க வேண்டியது அதிகாரியின் கடமையாகும். சங்கத்தை லாபகரமாக நடத்த அவர் முயற்சித்து இருக்க வேண்டும். ஒருவேளை அதை லாபகரமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டால்கூட குறிப்பிட்ட காலத்திற்குள் அதுகுறித்து ஊழியர்களுக்கு தெரிவித்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம். அந்த கடமையில் இருந்து தனி அலுவலர் தவறியுள்ளார். எனவே பொருளாதார நெருக்கடியைக்கூறி ஊதியம் அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருப்பது பட்டினி போட்டு இறக்கச் செய்வது போன்றதாகும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.