கோடை விடுமுறைக்கு பின், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி நேற்று திறக்கப்பட்டது. கல்லுாரிக்கு ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் அணிந்து வர மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லுாரியில், 2,600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று, கல்லுாரி திறக்கப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர், அடையாள அட்டை எடுத்து வந்துள்ளனரா? என பரிசோதனை செய்து அனுப்பப்பட்டனர்.
அடையாள அட்டை எடுத்து வராதவர்கள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் அணிந்து வந்த மாணவ, மாணவியர், நேற்று ஒருநாள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்; இனிவரும் காலங்களில் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 22ம் தேதி நடக்கிறது.