முதற்கட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் 4,800 பேருக்கு அழைப்பு

முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது; ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு உண்டு. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2257; எட்டு சுயநிதி கல்லூரிகளில் 551 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரியில் 85 பி.டி.எஸ்
. இடங்களும் உள்ளன. ’மறுகூட்டல் மறுமதிப்பீட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கான சான்றுகளை கட்டாயம் எடுத்து வர வேண்டும்’ என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் தெரிவித்து உள்ளார்.

கலந்தாய் தேதி, ’கட் - ஆப்’ விவரம்

19ம் தேதி, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

தேதி பிரிவு ’கட் - ஆப்’

20 பொது 200 - 198.25
21 பொது 198.25 - 197.50
22 பொது 197.50 - 197.00
23 பொது 197.00 - 196.25
24 பி.சி., 196.50 - 196.25 - பி.சி., (மு) 196.50 - 195.00 - எம்.பி.சி., 196.50 - 195.50 - எஸ்.சி., 196.50 - 192.00
25 எஸ்.சி., 192.00 - 190.50 - எஸ்.சி., (அ)196.50 - 186.75 - எஸ்.டி., 194.25 - 180.25

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...