சுப்ரீம் கோர்ட் அளிக்கும் விளக்கத்திற்கு பின்னரே, சிவில் சர்வீசஸ் தேர்வு விண்ணப்பத்தில், திருநங்கையர், மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்படுவர்’ என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு விண்ணப்பத்தில், ஆண், பெண் என, இரண்டு பாலினத்தை
தெரிவிப்பதற்கான வசதி மட்டுமே உள்ளது.’மூன்றாம் பாலினம்’ எனப்படும், திருநங்கையர் பிரிவினர் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள், முக்தா குப்தா மற்றும் பி.எஸ்.தேஜி ஆகியோரை கொண்ட அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, யு.பி.எஸ்.சி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர்.
அதில், ’யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், திருநங்கையர் விண்ணப்பிக்க ஏதுவாக, மூன்றாம் பாலினம் என, இப்போதைக்கு குறிப்பிட முடியாது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் சில விளக்கங்களை கேட்டுள்ளோம். அந்த விளக்கங்கள் வந்த பின் தான், இதுகுறித்து பரிசீலிக்க முடியும்’ என, தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கை, ஜூலை 27ம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
புராண காலத்திலிருந்தே...
திருநங்கையர் சார்பில், வழக்கறிஞர் ஜம்ஷத் அன்சாரி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஆண், பெண் போலவே, திருநங்கையரும் இந்த சமுதாயத்தின் அங்கம் தான். புராண காலத்திலிருந்து மூன்றாம் பாலினத்தவர் இருப்பது தெரியவருகிறது. எனினும், இந்த பிரிவினருக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில், இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதுடன், அதற்கான விண்ணப்பங்களில், மூன்றாம் பாலினம் என, குறிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.
திருநங்கையரை, சமூகம் மற்றும் கல்வியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவாக கருதி, அனைத்து விதமான சலுகைகள், இடஒதுக்கீடுகளும் வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.எனவே, ஆக., 15ம் தேதியுடன், விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு தரப்பு வாதம் என்ன?
* மூன்றாம் பாலினம் என்பது யார், அதற்கான விளக்கம் என்ன, அதை யார் சான்றளிப்பது என்பதில், தெளிவான விளக்கம் இல்லை.
* சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
* கடந்த 2014 ஏப்., 15ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, இருபாலின உறவாளர்கள், ஆண் பாலின உறவாளர்கள் மற்றும் பெண் பாலின உறவாளர்கள், திருநங்கையராக கருதப்படுகின்றனர்