தமிழகத்தில் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய பகுதிகளில், தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. பருவ மழையின் தீவிரம் காரணமாக, அந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியிலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் பெரியாறில் அதிகபட்சமாக 140 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் 100 மி.மீ, நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் 90 மி.மீ, கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 80 மி.மீ, நீலகிரி மாவட்டம் தேவலா, கேத்தியில் 70 மி.மீ, ஜி.பஜாரில் 50 மி.மீ, நடுவட்டத்தில் 40 மி.மீட்டர் மழை பதிவானது.
பலத்த மழை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தேனி, நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.