அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் டன் கணக்கில் வகுப்பறைகளில் தேங்கி கிடப்பதால் பல்வேறு சிக்கல்கள் எழுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.
மதிப்பீடு செய்யப்பட்ட அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஓராண்டுக்கு பாதுகாப்பாக வைப்பது வழக்கம். ஆனால், அதிகாரிகள் உரிய நேரத்தில் முடிவெடுக்காத காரணத்தால், தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக மதிப்பீடு செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள்கள், இன்னும் பாதுகாக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் மட்டும், 42 அரசு, தனியார் பள்ளி வகுப்பறைகளில், டன் கணக்கில் பழைய விடைத்தாள்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பிரச்னை இருந்து வருகிறது. வகுப்பறை பற்றாக்குறை கடுமையாக இருக்கும் சூழலிலும், இவ்வாறு பழைய விடைத்தாள்களை பாதுகாப்பது தொடர்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் கிடப்பில் இருந்த சமச்சீர் அல்லாத பழைய பாடத்திட்ட புத்தகங்கள் அலுவலர்கள் சிலரால் விற்பனை செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதனால், &'டன் கணக்கில் குவிந்திருக்கும் விடைத்தாள்கள் காணாமல் போனால் என்ன செய்வது&' என்ற அச்சம், அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வகுப்பறை பிரச்னை, விடைத்தாள்களை இடம் மாற்றும்போது ஏற்படும் போக்குவரத்து செலவு, தனியார் பள்ளிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாதது என, பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் கல்வித்துறை அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
இம்மாணவர்களின், அனைத்து பாட விடைத்தாள்களும், ஒன்பது ஆண்டாக தேக்கிவைக்கப்பட்டுள்ளன. ஓராண்டுகளுக்கான விடைத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதே வழக்கம். எந்த காரணமும் இன்றி, பல ஆண்டாக இப்படி பழைய விடைத்தாள்களை பாதுகாப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நாங்களாக முன்வந்து அவற்றை அகற்றினால், சிக்கல்கள் எழும்.
உயர் அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். கோவையில் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் கூறுகையில், &'&'பழைய விடைத்தாள்களை அகற்ற கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.