அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளை காட்டிலும் அதிகளவு ஆர்வம்

நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டில் அரசுப்பள்ளிகளில், இதுவரை, 1,600 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த நான்கு
ஆண்டுகளில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், 265 வகுப்பறை கட்டிடங்கள், 567 கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

2.74 கோடி ரூபாய் மதிப்பில், கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களும், 4.21 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 33.19 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களும், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயில, 3.39 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள், 2.75 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகளுக்கு தேவையான பல்வேறு தளவாட சாமான்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆறு கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு மாதிரி பள்ளிக் கட்டிடங்கள், 2.18 கோடி ரூபாய் மதிப்பில், 29 கூடுதல் வகுப்பறை கட்டிடம், 1.85 கோடி ரூபாய் மதிப்பில், 23 அறிவியல் ஆய்வகங்கள், 15 லட்சம் ரூபாயில் கழிப்பிடங்கள், 2.50 லட்சத்தில், குடிநீர் வசதி, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

நபார்டு திட்டத்தின் கீழ், 12.42 கோடியில், எட்டு பள்ளிகளுக்கு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, தளவாட சாமான்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து, 3.06 கோடி ரூபாயில், 29 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 288 தொடக்கப்பள்ளிகளில், புதிய கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 112 முதுநிலை ஆசிரியர்கள், 444 ஆசிரியர்கள் என மொத்தம் 556 ஆசிரிய, ஆசிரியைகளும், 195க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 30 மாணவ, மாணவியர் கடந்த ஆண்டு பயன்பெற்றுள்ளனர்.

கல்வி இடை நிற்றலை தவிர்க்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.ஸி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 46 ஆயிரத்து, 277 பேருக்கு, 1.14 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர்கள் ஆங்கில கல்வியை இலவசமாக பெறுவதற்காக, 54 அரசு பள்ளிகளில், ஆங்கில வழி பாடப்பிரிவுகள் துவங்கி நடந்து வருகிறது.

இத்தகைய செயல்பாடுகளால், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில், அதிக மாணவ, மாணவியர் சேர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை, அரசுப்பள்ளிகளில் 1,600 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...