ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ விவகாரம்: முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று முதல் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம்

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று முதல் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
ஆனால் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் ராணுவ வீரர்கள் அறிவித்து இருந்தனர்.

இதன்படி நேற்று தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். இதில் சில விவசாய சங்கத்தினர் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களை சேர்ந்த சில மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடப்போவதாக முன்னாள் ராணுவத்தினர் அறிவித்து உள்ளனர். மேலும் இந்த பிரச்சினையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும்   இந்தியா முழுவதும் 55 நகரங்களில்  பேரணி நடைபெற உள்ளது. சுமார் 5, ஆயிரம் மக்கள் இதில் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போராட்டங்களை கைவிடுமாறு முன்னாள் ராணுவ வீரர்களை, ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...