காஸ் மானியம் பெற இன்றே கடைசி நாள்...

சமையல் காஸ் மானியத் திட்டத்தில் இணைய, இன்றே கடைசி நாள். கடந்த, 20 நாட்களில், இரண்டு லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், இன்னும், 14 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை.
அவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஜனவரி முதல் வாங்கிய சிலிண்டர்களுக்கான
மானியத்தைப் பெற முடியாது என, உஷார்படுத்தப்பட்டு உள்ளது.


சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் செலுத்தும் திட்டம், ஜனவரி மாதம், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்த நேரடி மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஜூன், 30ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டது.
இத்திட்டப்படி, வாடிக்கையாளர்கள், சமையல் காஸ் சிலிண்டரை, முதலில் சந்தை விலையில் வாங்க வேண்டும். பின், மானியத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில், சம்பந்தப்பட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால், நேரடியாக வரவுவைக்கப்படும்.
இதன்படி, ஏராளமானவர்கள் விண்ணப்பித்து, நேரடி மானியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
இன்று இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு, ஜனவரி முதல் இதுவரை வாங்கிய சிலிண்டர்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மானியம், மொத்தமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நாளை முதல், வாடிக்கையாளர் எந்த மாதத்தில் இணைகிறாரோ, அந்த மாதத்திலிருந்து தான் மானியம் தரப்படும். தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.54 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இவர்களில், நேற்று வரை, 1.40 கோடி பேர், சமையல் காஸ் மானியத்தை, வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள, 14 லட்சம் பேர் இன்னும்
விண்ணப்பிக்கவில்லை.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 10ம் தேதி வரை, நேரடி மானியத் திட்டத்தில், 1.38 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இம்மாதம், 30ம் தேதி, கடைசி நாள் என்பதால், கடந்த, 20 நாட்களில், இரண்டு லட்சம் பேர் இணைந்தனர். இதுவரை, மானியத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு, முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் சேர்த்து, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...