தலைக்கவசம்: அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு

இரு சக்கர வாகன ஓட்டிகள், இருக்கையில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணியத் தவறினால், வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் பொது அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடுக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்குரைஞரின் குமாஸ்தா டி.கோபாலாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
 இரு சக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இருவரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
 அவ்வாறு அணியத் தவறினால் வாகனங்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், ஐ.எஸ்.ஐ. தரத்துடன் கூடிய புதிய தலைக்கவசம், அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றைக் காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் எனவும் கடந்த 18-ஆம் தேதி தமிழக அரசு பொது அறிவிப்பு வெளியிட்டது.
 ஆனால், மோட்டார் வாகனச் சட்டம் 1988-இல் தலைக்கவசம் அணியத் தவறினால், வாகனத்தின் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படவில்லை.
 வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் முதல் முறை தலைவக்கவசம் அணியத் தவறினால், தண்டனையாக ரூ.100 அபராதமும், இரண்டாவது முறையெனில் ரூ. 300 அபராதமும் விதிப்பது தொடர்பாகவே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதைத் தவிர வாகனத்தின் ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற விதிகள் மோட்டார் வாகனச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
 தமிழக அரசு வெளியிட்ட பொது அறிவிப்பு, சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைக்கவசம் அணியத் தவறினால், வாகனத்தின் ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பொது அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
 மேலும், இரு சக்கர வாகனத்தின் ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
 இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...