இருதயத்தை பலப்படுத்தும் புதிய புரதம்

இருதயத்தை பலப்படுத்தும் புரதம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இருதய செல்களை பலப்படுத்தும் புதிய "வின்குலின்' எனப்படும் புதிய புரதத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மற்ற உடல் உறுப்புகளைப் போல் இல்லாமல் இருதயம் குறைந்த அளவில் தான் புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. அதே நேரம் இரவு பகலாக மனிதனின் ஆயுட்காலம் முழுவதும் உழைக்கிறது. இடைவிடாத உழைப்பினால் இருதயத்தின் செல்கள் பலம் இழந்து வேலைத் திறனை இழக்கிறது. அதனால் வயதான காலத்தில் அதனுடைய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருதய நோய்கள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன. உலகில் கோடிக்கணக்கில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாரடைப்பு போன்றவை திடீரென ஏற்படுவதால் பலரும் உயிரை இழக்கின்றனர். இது தவிர மூச்சு விடுவதில் சிரமம், பலவீனம், படபடப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

எனவே இருதய தசைகளுக்கு பலம் கொடுக்கும் புதிய சிகிச்சை அவசியம் ஆகிறது. ஆராய்ச்சியாளர்கள் குரங்கு, எலி போன்றவற்றில் மரபு ரீதியாக வின்குலின் புரத உற்பத்தியை அதிகரித்ததில் அவற்றின் வாழ்நாள் அதிகரிப்பதை கண்டனர்

இருதயத்தை பலப்படுத்தும் இப்புதிய புரதத்தின் மூலமாக இருதய சிகிச்சைக்கு புதிய வழி கிடைக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...