பல புதிய அம்சங்களுடன் கொண்டாடுகிறது.
கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர கூகுள் எர்த் எனும் சிறப்பு அம்சத்தை 2004ல் அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில்
வாடிக்கையாளர்களை மகிழ்விக்க மேலும் பல சிறப்பு அம்சங்களை அதில் சேர்த்துள்ளது.
வாயேஜர் மற்றும் விரிவு படுத்தப்பட்ட உலக வரைபட தொகுப்பு என புதிதாக இரண்டு சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
தற்போது வாயேஜர் அனுபவத்தை கூகுள் எர்த்தின் டெஸ்க்டாப் பதிப்பில் மட்டுமே அனுபவிக்க முடியும். இதன் மூலமாக உலகில் உள்ள சுவாரஸ்யமான இடங்களை உடனே அணுக முடியும். உலகில் உள்ள முக்கிய நகரங்களின் வீதிக் காட்சிகள், புவி வரைபடம், 3 டி நகரங்கள், அன்றாட செயற்கைக் கோள் வரைபடம், உலகின் முக்கிய இடங்களின் சிறப்புப் பார்வை என வாயேஜர் ஐந்து பகுதிகளைக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறது.
ஸ்ட்ரீட் வியூ எனப்படும் வீதிக் காட்சிகள் மூலம் உலகில் உள்ள முக்கிய நகரங்களின் வீதிகளின் தோற்றத்தை 360 டிகிரி கோணத்தில் அனுபவிக்க முடியும். எர்த் வியூவில் விண்ணில் இருந்து பூமியைப் பார்க்கும் அனுபவத்தைப் பெற முடியும். 3 டி நகரங்கள், 3 டி வியூவில் பார்க்கப்படக் கூடிய நகரங்களின் பட்டியலை தருகிறது. அன்றாட செயற்கைக் கோள் வரைபடம் மூலமாக உலகின் பல்வேறு பகுதிகளின் அப்போதைய வானிலையை அறிய முடியும். எர்த் வியூ ஆரம்பத்தில் இருந்தே கூகுள் எர்த்-ல் இடம் பெற்றிருந்தாலும், தற்போது கூடுதலாக 1500 புவி வரைபடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இது வரை கூகுள் புரோ எனப்படும் அம்சத்தை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தது. அது தற்போது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இலவசமாக ஆக்கப்பட்டிருக்கிறது. கூகுள் எர்த்தை விண்டோஸ், ஓஎஸ். எக்ஸ், லைனு எக்ஸ், ஆண்ட்ராய்ட் போன்ற பதிப்புகளில் இலவசமாக பெறமுடியும்