சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை படிப்புகளுக்காக இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி ஜூலை 24 ஆகும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி ஜூலை 31.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா- இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத கல்லூரி ஆகிய ஆறு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியது:
கடந்த ஆண்டு மொத்தம் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3 ஆயிரம் பேர் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். இணையதளத்திலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெறுகின்றனர்.
விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு ரேண்டம் எண், தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சிலின் (சி.சி.ஐ.எம்) அனுமதி கிடைக்க வேண்டியுள்ளது. அதற்கான அனுமதியையும் கணக்கில் கொண்டே கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.