ஆசிரியர் பட்டய படிப்பிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 50 கல்வியிடங்களுக்கு 42 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தமிழகமெங்கும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், ஆசிரியர்
பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், களியாம்பூண்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள 50 இடங்களுக்கு, 85 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில், பட்டய படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பி.எஸ். சீனுவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில், பல்வேறு காரணங்களால், 44 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதில், இருவர் வெளிமாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்தனர். மீதமுள்ள 42 பேரில், ஒரு மாணவனும், 41 மாணவியரும் காஞ்சிபுரம் களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்தனர். மொத்தமுள்ள 50 கல்வியிடங்களில், நடப்பாண்டில் 42 பேரும், கடந்த ஆண்டில் 45 பேரும் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.