மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர். தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், பழைய மாணவர் சேர்க்கை விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், உடனடியாக சேர்க்கை கடிதம் தரப்படவில்லை. சிக்கல் தீர்ந்தபின் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது; கல்லுாரியில் சேர நேற்று கடைசி நாள். எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரிகளில், 12 பேர்; சுயநிதி கல்லுாரிகளில், 46 பேர்; அரசு கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்பில், 11 பேர் என, 69 பேர், இடம் தேர்வு செய்தும், சேர்க்கை கடிதம் பெறவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில், காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இடம் தேர்வு செய்த, 69 பேர் சேர்க்கை கடிதம் பெறவில்லை; இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 69 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும், என்றார்.

மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர்.

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், பழைய மாணவர் சேர்க்கை விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், உடனடியாக சேர்க்கை கடிதம் தரப்படவில்லை.

சிக்கல் தீர்ந்தபின் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது; கல்லுாரியில் சேர நேற்று கடைசி நாள். எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரிகளில், 12 பேர்; சுயநிதி கல்லுாரிகளில், 46 பேர்; அரசு கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்பில், 11 பேர் என, 69 பேர், இடம் தேர்வு செய்தும், சேர்க்கை கடிதம் பெறவில்லை.

மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில், காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இடம் தேர்வு செய்த, 69 பேர் சேர்க்கை கடிதம் பெறவில்லை; இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 69 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...