கண்களை பரிசோதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் பார்வை குறைபாட்டை கண்டறிவது குறித்து, பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்லடம் வட்டார வளமையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் நடந்த இப்பயிற்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் கமல்குமார் தலைமை வகித்தார். வட்டார உதவி கண் மருத்துவர் பால்ராஜ், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது குறித்து விளக்கம் அளித்தார்.

அவர் பேசுகையில், ஆறு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பார்வை திறன் குறித்து, கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பரிசோதிக்க வேண்டும். அதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி தரப்படுகிறது.

பார்வை குறைபாட்டை கண்டுபிடிக்க உதவும் சார்ட், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதை படிக்கச் சொல்லி, மாணவர்களின் பார்வை குறைபாட்டை கண்டறியலாம். அவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்து, குறைபாட்டுக்கேற்ப, கண்ணொளி காப்போம் திட்டம் மூலம், இலவச கண் கண்ணாடி வழங்கப்படும்,என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...