இன்ஜினியரிங் கல்லூரி மாணவனுக்கு கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததற்காக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை, 20 ஆயிரம் ரூபாய், நஷ்டஈடு வழங்க வேண்டும் என, திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் அருண். கடந்த, 2013ம் ஆண்டு ஜூலை மாதம், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், தோளூர்பட்டி, கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில், பி.இ., படிப்பிற்கான சீட், அருணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, அருண், துறையூர் தாலுகா, கண்ணனூரில் இயங்கி வரும், தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில், 2013ம் ஆண்டு டிசம்பர், 20ம் தேதி, கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார்.
ஆனால், கல்விக் கடன் வழங்காமல், வங்கி நிர்வாகம் இழுத்தடிப்பு செய்தது. அதிருப்தியடைந்த அருண், திருச்சி மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்தார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் (பொறுப்பு) தங்கபாலா, உறுப்பினர் ஜெயலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.
இதையடுத்து, வங்கியின் சேவை குறைபாடுக்காக, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், நஷ்டஈடாக, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவினங்களுக்காக, இரண்டாயிரம் ரூபாயை, பாதிக்கப்பட்ட மாணவன் அருணுக்கு வழங்க வேண்டும்.
கல்விக்கடன் வழங்குவது வங்கி நிர்வாகத்தை பொறுத்தது. அதே சமயம், மன்றம் வழங்கிய உத்தரவின்படி, மாணவன் அருணுக்கு, இழப்பீடு, நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவின தொகையை, இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.