நீதிபதிகள் மீதான புகார்: விரைந்து விசாரிக்கக் கோரிக்கை

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 175 பேர் மீதான புகார் குறித்து விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 வழக்குரைஞர்களும், பொதுமக்களும் ஆதாரப்பூர்வமான புகாரை சம்பந்தப்பட்ட நபரின் பெயர், வழக்கு எண்ணுடன் தமிழகம் முழுவதிலும் இருந்து பெற்று தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதற்காக, சங்க அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புகார் பெட்டி வைக்கப்படும்.
 மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளை பணி நீக்கம் செய்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüலின் நடவடிக்கைக்கு இந்தச் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இது தவிர, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 175 பேர் மீதான புகார் குறித்து தலைமை நீதிபதி விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...