தேவகோட்டை நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், விளையாடிய போது மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு காதில் ரத்தம் வழிந்தது. ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்ததாக பெற்றோர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
தேவகோட்டை மாட்டுச்சந்தை தெரு பெயின்டிங் தொழிலாளி அழகர்சாமி. இவரது மூத்த மகன் அருண்குமார் 12., தேவகோட்டை நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை மாணவர்கள் விளையாடினர். அப்போது அருண்குமார் கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த அடிபட்டு காது வழியே ரத்தம் வழிந்துள்ளது. இதனை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்தையொட்டி உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு மாணவரை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் காதில் ரத்தம் வழிவதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் இருவர் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு மாணவரை அனுப்பி வைத்தனர். மாணவர்களாக வந்ததால் பெரியவர்களை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். சிகிச்சைக்காக வந்த ஒருவர் மாணவர் அருண்குமாரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக சிவகங்கைக்கு அனுப்பியுள்ளனர். சிவகங்கைக்கு செல்லும் வழியில் அருண்குமார் மயக்கம் ஏற்படவே, அவசர சிகிச்சைக்காக தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது.
தாய் புகார்: அருண்குமாரின் தாய் ராசாத்தி,11 மணிக்கு மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் மகன் அருண்குமார் தலையில் அடிபட்டு,காதிலும்,மூக்கிலும் ரத்தம் வந்தும் தலைமையாசிரியர் எங்களிடம் தெரிவிக்கவில்லை.பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு மகன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
அக்கம் பக்கம் இருந்தோர் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை கொண்டு செல்லும் போது மீண்டும் மயக்கமடைந்ததால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். எனது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் தலைமையாசிரியர் தான் பொறுப்பு. மாவட்ட கல்வி அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி ஆய்வாளர் ராஜதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கவுன்சிலர் பாலமுருகன், காங்.நிர்வாகி செந்தில்குமார், அப்துல்லா, உறவினர்கள் , முன்னிலையில் தலைமையாசிரியை விசுவாசம், மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடந்தது.
தலைமை ஆசிரியர் அலுவலக பணி பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், மற்றொரு ஆண் ஆசிரியர் டிரசரிக்கு சென்றதாகவும், ஆசிரியை மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பியதாகவும் கூறினர். அந்த ஆசிரியை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றனர்.
காயமடைந்த மாணவர் அருண்குமார் கூறியதாவது: நாங்கள் விளையாடிக் கொண்டு இருந்தோம். அப்போது தொடக்கபள்ளி கட்டடத்தில் கீழே விழுந்தேன்.
அதில் தலையில் அடிபட்டது. மூன்று ஆசிரியைகள் பேசிக்கொண்டு இருந்தனர். எங்கள் டீச்சர் டிரெயினிங் போய்விட்டார். சுப்புலட்சுமி டீச்சர் தான் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து வந்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் கூறியதாவது: புகார் கொடுத்துள்ளனர். தகவல் சொல்லவில்லை,அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். தலைமையாசிரியரிடம் நடந்தது பற்றி விளக்கமாக அறிக்கை கேட்டுள்ளேன்,என்றார்.