உங்கள் கம்பியூட்டரை அப்டேட் செய்து கொள்ளுங்கள்!

கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...