தன்னடக்கத்திலும், தன்னம்பிக்கையிலும் உச்சம் தொட்டவர்!

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், அவர் நமக்காக விட்டுச் சென்ற தகவல்கள் ஏராளம் ஏராளம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த இந்தியாவின் முதல் குடிமகன் என்ற நிலை வரை உயர்ந்த அப்துல் கலாமுக்கு, தான் என்ற எண்ணம் எப்போதும் வந்ததில்லை.

அவர் எந்த அளவுக்கு தன்னடக்கத்தில் சிறந்து விளங்கினாரோ அதே அளவுக்கு தன்னம்பிக்கையிலும் உச்சம் தொட்டவர்.

அவரது முழு கவனமும் இந்திய இளைஞர்களிடமும், மாணவ, மாணவிகளிடமுமே இருந்தது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்ற வாக்கியத்தை முழுமையாக அர்த்தப்படுத்தியவர் அப்துல் கலாம்தான்.

"கனவு காணுங்கள். உங்கள் உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு" என்று கனவுக்கும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கைக்கு புது அர்த்தம் சொன்னவர் அப்துல் கலாம்.

அவரை நினைத்து இந்த நாளில் ஆழ்ந்த வருத்தம் கொள்ளும் நாம், அவர் சொன்ன வார்த்தைகளை பின்பற்றி வாழ்வது ஒன்றே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்பதை உணர வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...