பழைய பேப்பர் சேகரிக்கும் பள்ளி செல்லா குழந்தைகள்: செயல்படாத "சைல்டு லைன்' அமைப்பு

பழைய பேப்பர் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள "சைல்டு லைன்' அமைப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்டு, மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பது, பாதுகாப்பு, பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளை மீட்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளை மீட்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்காக மத்திய அரசு "சைல்டு லைன்' அமைப்பை ஏற்படுத்தியது.
 குழந்தைகள் தொடர்பாக இந்த அமைப்பை எளிதாகத் தொடர்பு கொள்ளும் வகையில் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
 இந்தத் தொலைபேசியில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து புகார் தெரிவித்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த அமைப்பின் மாவட்ட அதிகாரிகளோ அல்லது அந்த அமைப்பால் நியமிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரோ, தன்னார்வலர்களோ நிகழ்விடத்துக்கு வந்து குழந்தைகளை மீட்க வேண்டும்.
 அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளை கூர்நோக்கு இல்லங்களில் சேர்க்க வேண்டும். அங்கு அவர்களுக்கு உணவு, தங்கும் இடம், சீருடை, இலவச பாடப்புத்தகம், பள்ளி ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.
 தங்களது குழந்தையை அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர் உறுதியளித்தால், அந்தப் பகுதியில் செயல்படும் பள்ளியில் குழந்தையை சேர்த்து விட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். குழந்தைகள் பள்ளி இடை நிற்றலைத் தடுக்க இந்த நிதி வழங்கப்படுகிறது.
 இந்த நிலையில், காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவில் உள்ளாவூரைச் சேர்ந்த மணி- சித்ரா தம்பதியினர் தங்களது மகன் ராஜா (9), மகள் வள்ளி (8) ஆகியோருடன் சேர்ந்து பழைய பேப்பர், புட்டிகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளின் நிலையைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் 1098 என்ற தொலைபேசி எண்ணில் "சைல்டு லைன்' அமைப்பைத் தொடர்பு கொண்டனர். ஆனால், இந்த அழைப்பை சம்பந்தப்பட்ட அமைப்பின் அதிகாரிகள் எடுக்கவில்லை.
 இதையடுத்து, குழந்தைகள் கண்காணிப்பகம் என்ற பெயரில் குழந்தைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராஜ், அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட "சைல்டு லைன்' பொறுப்பாளர் தேவ அன்பு கூறுகையில், கடந்த 3 மாதங்களாக 1098 என்ற தொலைபேசி எண் 5 மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எண் சரிவர செயல்படவில்லை.
 இதுதொடர்பாக எங்களது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். இந்தப் பிரச்னையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...