அதிக விலைக்கு தலைக்கவசம்; வியாபாரிகளுக்கு அரசு எச்சரிக்கை: புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு

தலைக்கவசத்தின் விலையை சட்ட விதிகளுக்குப் புறம்பாக அதிக விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தொழிலாளர் துறை எச்சரித்தது.
 அதிக விலைக்கு தலைக்கவசத்தை
விற்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் துறை ஆய்வர்களுக்கு தொழிலாளர் துறை ஆணையர் பெ.அமுதா உத்தரவிட்டுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 தற்போது தலைக்கவசம் உள்ளிட்ட பல பொட்டலப் பொருள்கள் சட்ட விதிகளுக்கு மாறாக, அதிகபட்ச சில்லறை விற்பனை (எம்ஆர்பி) விலையைவிட அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு தலைக்கவசம் உள்ளிட்ட பொருள்களை அதிக விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆய்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 தலைக்கவசத்தை அதிக விலைக்கு விற்போர் குறித்து புகார் தெரிவிக்க, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களின் செல்லிடப்பேசி எண்களையும் அவர் அளித்துள்ளார். அதன் விவரம்:
 1. சென்னை-1-ஆம் வட்டம் 9445398738
 2. சென்னை- 2-ஆம் வட்டம் 9445398739
 3. சென்னை- 3-ஆம் வட்டம் 9445398740
 4. காஞ்சிபுரம் 9445398743
 5. திருவள்ளூர் 9445398745
 6. கடலூர் 9445398746
 7. வேலூர் 9445398741
 8. விழுப்புரம் 9445398747
 9. திருவண்ணாமலை 9445398742
 10. திருச்சி 9445398756
 11. தஞ்சாவூர் 9445398757
 12. திருவாரூர் 9445398758
 13. பெரம்பலூர் 9445398759
 14. திண்டுக்கல் 9445398760
 15. கரூர் 9445398754
 16. தேனி 9445398762
 17. மதுரை 9445398761
 18. விருதுநகர் 9445398763
 19. சிவகங்கை 9445398767
 20. ராமநாதபுரம் 9445398764
 21. திருநெல்வேலி 9445398768
 22. தூத்துக்குடி 9445398769
 23. நாகர்கோயில் 9445398771
 24. கோவை 9445398752
 25. திருப்பூர் 9445398772
 26. சேலம் 9445398749
 27. ஈரோடு 9445398751
 28. நாமக்கல் 9445398750
 29. கிருஷ்ணகிரி 9445398748
 30. குன்னூர் 9445398753

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...