தலைவர்கள் அப்துல்கலாம் உடலுக்கு இறுதி மரியாதை!

 காலை 9.30 மணிக்கு அவரது வீட்டில் இருந்து முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு எடுத்துவரப்பட்டது. முஸ்லிம் நிர்வாக கமிட்டி யினர், அப்துல் கலாம் உடல் அடங்கிய பெட்டியை சுமந்து வந்தனர்.


காலை 9.55 மணிக்கு உடல் பள்ளிவாசல் வந்ததும் இஸ்லாமிய முறைப்படி ஜனசா தொழுகை நடை பெற்றது. முன்னதாக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்  இமாம் அப்துல்ரகுமான் யாசின் ஓதினார். தொடர்ந்து அப்துல் கலாம் ஆத்ம சாந்திக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன்அலி ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராள மான மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென் னையை சேர்ந்த 2 மாண வர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி பள்ளிவாசலில் காலை முதல் நின்று கொண்டிருந்தனர்.சிறப்பு தொழுகை முடிந் ததும் அப்துல் கலாம் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் பேய்கரும்பு திடலுக்கு கொண்டு செல் லப்பட்டது.

 தற்போது ஊர்வலமாக வந்த கலாம் உடல் பேய்கரும்பு திடலை அடைந்து உள்ளது. இந்த திடலில்  தற்போது  தலைவர்கள் குவியத்தொடங்கி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தார்.அங்கு தமிழக கவர்னர் ரோசய்யா அவரை  வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் ராமேசுவரம் வந்தனர். அவர்கள் இறுதி சடங்கி’ல் கலந்து கொள்ள  பேய்க்கரும்பு திடல் வந்தனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடி அப்துல்கலாம் உடலுக்கு இறுதி மரியாதை  செலுத்தினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் காங்கிரஸ் துணைதலைவ்ர் ராகுல்காந்தி , தமிழக் அமைச்சர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர்  உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்கின

21 குண்டுகள் முழங்க கலாமுக்கு பாதுகாப்புப் படையினர் பிரியாவிடை கொடுத்த்னர். அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.கலாம் அடக்கம் செய்யப்பட்ட கபர் அருகே குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...