ராணுவத்தில் சேர ஆன் - லைனில் விண்ணப்பம்!

நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி,
ராணுவத்தில் சேர விரும்புவோர், இனி, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,&'&' என, ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே கூறினார்.

ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின், புதிய இணையதளமான, joinindianarmy.nic.in-ல் காணப்படும் விண்ணப்பத்தை,

ஆன் - லைனில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். ராணுவ வீரர் பணியில் சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; ஆன்-லைன் மனுவோடு இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, voober என்ற புதிய மொபைல் போன், அப்ளிகேஷனை - ஆப்பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...