மாஸ்கோ:கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில், ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.கடந்த சில
ஆண்டுகளாக, உலக நாடுகளில், அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகள் வரிசையில், முதல் மூன்று இடங்களில், அமெரிக்கா, சீனா, ரஷ்யாவும், நான்காவது இடத்தில் இந்தியாவும் இருந்தன.
கடந்த ஓராண்டில், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 27 சதவீதம் உயர்ந்து, 97 ஆகவும், ரஷ்யாவில், இந்த எண்ணிக்கை குறைந்து, 93 ஆகவும் உள்ளது. இரு நாட்டு கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை ஒப்பிட்டால், ரஷ்யர்களை விட இந்திய கோடீஸ்வரர்களிடம், 100 கோடி அமெரிக்க டாலர் அளவில் சொத்துகள் அதிகம் உள்ளன. மாஸ்கோவில் மட்டும், 73 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.இதையடுத்து, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா, அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.