தமிழக அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் மத்திய அறிவியல் துறையின் சார்பில், 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல்
படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் சிறந்த படைப்புகளை செய்திருந்த 248 மாணவ, மாணவிகளின் படைப்புகளின் கண்காட்சி நெல்லை பெல் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்தது.மேயர் புவனேஸ்வரி, எம்.பி.,க்கள் விஜிலா, முத்துக்கருப்பன் பங்கேற்றனர்.
சிறந்த படைப்புகளை தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடக்கும் கண்காட்சியில் பங்கெடுக்கவும், தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுக்கவும் செய்கின்றனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு மறுபயன்பாடு, தொழிற்சாலை புகையில் கார்பன் குறைப்பு, காணாமல் போகும் விமானங்களை கண்டுபிடிக்கும் கருவி, சூரியஒளி, காற்றில் இருந்து வீட்டுக்குமின்சாரம் தயாரிப்பு, நெல்லை கண்காட்சியில் இடம்பெற்ற 248 மாணவ, மாணவிகளுக்கும் தலா 5 ஆயிரம் மதிப்பிலான இன்ஸ்பயர் விருது வழங்கப்பட்டது.