சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்

சென்னை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர் தேர்வு பெற்றனர். இதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், 418 பேர்; சமச்சீர் கல்வியில் பயின்றவர்கள், 33 பேர். ஆந்திராவில், 3,204 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.


தமிழகத்தில், சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்துள்ளதையே இது காட்டுகிறது. சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்.

கடந்த, 11 ஆண்டுகளாக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படாமல் உள்ளது. இதனால், தமிழகத்தில், கல்வித் தரம் குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கான நில அளவையை குறைக்க வேண்டும்.

10 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான போக்குவரத்து விதிகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...