குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்-மதுபானக் கூடங்கள் வியாழக்கிழமை செயல்படாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் கூடிய மதுபானக் கூடங்கள், அனுமதி பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் ஆகியவை வியாழக்கிழமை முழுவதும் மூடப்பட்டிருக்கும்.
அதேசமயம், எப்.எல்.6 என்ற உரிமத்தை பெற்றுள்ள மதுபான தயாரிப்பு சார்ந்த பிரிவின் கீழ் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் (மது விலக்கு-ஆயத்தீர்வை) அபூர்வ வர்மா புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு-தனியார் நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து மதுபானக் கூடங்களை மூடுவதற்கு மது விலக்கு-ஆயத்தீர்வைத் துறை ஆணையாளர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரையிலான அரசு அனுமதி பெற்ற மதுபானக் கூடங்களை மூடுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது கோரிக்கையில் தெவித்திருந்தார்.
கடைகள் மூடப்படும்: மது விலக்கு-ஆயத்தீர்வைத் துறை ஆணையாளரின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை முழுவதும் மூடப்படும்.
குடியரசு முன்னாள் தலைவரின் மறைவை ஒட்டி, அறிவிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மது விலக்கு-ஆயத்தீர்வைத் துறை ஆணையாளர்-டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், காவல் துறை இயக்குநர், கூடுதல் இயக்குநர் (அமலாக்கம்), கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு), அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது உத்தரவில் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.