காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு (ஆர்.டி.ஐ.,) நாடு முழுவதிலும் பொது மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் இதனை அரசு நிர்வாக துறைகள் பெரிதாக
கண்டு கொள்வதில்லை என மத்திய தகவல் கழகம்(சி.ஐ.சி.,) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் ஆர்.டி.ஐ.,சி.ஐ.சி.,யும், மாநில தகவல் கழகங்களின் காமன்வெல்த் மனித உரிமைகள் முனைப்பகமும் இணைந்து ஆர்.டி.ஐ., குறித்த ஆய்வு ஒன்றை நடத்தின. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆண்டுக்கு எத்தனை ஆர்.டி.ஐ., மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றில் எத்தனை மனுக்களுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது. எத்தனை நிராகரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், 2013-14ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 லட்சம் ஆர்.டி.ஐ., மனுக்கள் நாடு முழுவதிலும் பெறப்பட்டுள்ளன. காஷ்மீரில் ஆர்.டி.ஐ., மனுக்களின் எண்ணிக்கை 127 சதவீதமும், குஜராத்தில் 41 சதவீதமும், கர்நாடகாவில் 31 சதவீதமும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதிகாரிகள் அலட்சியம் :அரசுக்கு அனுப்பப்படும் ஆர்.டி.ஐ., மனுக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தாலும், அவற்றில் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. 2013-14ம் ஆண்டில் பதிவான மனுக்களில் 60,127 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்படும் கேள்விகள் பலவற்றிற்கு முதல் முறையிலேயே பதில் அளிக்கப்படுவதில்லையாம். பலமுறை தொடர்ந்து கேட்ட பிறகே அரசு நிர்வாகத்தின் சார்பில் பதில் அளிக்கப்படுகிறதாம். இவைகளிலும் பல கேள்விகளுக்கான பதில் மனுதாரருக்கு திருப்திகரமாக இருப்பதில்லையாம்.
அலட்டிக் கொள்ளாத அரசுகள் :ஆர்.டி.ஐ., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும், அவர்களின் ஆட்சியிலேயே ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க அரசு மறுத்து விட்டதாம். குறிப்பாக அரசியல் கட்சிகள் பெறும் வெளிநாட்டு நிதிகள் குறித்த கணக்குகளுக்கு பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சியில் தான் அப்படி என்றால், பா.ஜ., ஆட்சி வந்த பிறகும் இதே நிலை தான் தொடர்கிறது. அரசு விவகாரங்களை வெளியிட முடியாது என்ற காரணத்தை கூறியே பல ஆர்.டி.ஐ.,மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றனவாம்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய தகவல் தர முடியவில்லை என்கின்ற போது தகவல் அறியும் உரிமை சட்டம் எதற்கு? அதனால் யாருக்கு என்ன பயன்? என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.