போர் நினைவு நாள் (ஆக., 28 )ல் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் ?

ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் டில்லி ஜந்தர்மந்தரில் 72 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இருவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஆஸ்பத்ததிரியில் சேர்க்கப்பட்டனர்.

ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. ராணுவ வீரர்களின் இந்த போராட்டத்திற்கு தியாகி அன்னா ஹசாரே தனது ஆதரவை தெரிவித்திருந்தார். பல அரசியல் கட்சியினரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் மகள் மிருணாளினி சிங் போராட்டக்களத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.



இந்நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், வரும் 28-ம் தேதி மத்திய அரசு முடிவினை அறிவிக்கிறது. 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போர் வெற்றியின் 50-வது ஆண்டு (பொன் விழா ) தினத்தன்று பிரதமர் மோடி ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக. பிரதமர் அலுவலகம் வட்டாரம் தெரிவிக்கிறது.

28 லட்சம் பேர் பயன் பெறுவர்: நாட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டால், முன்னாள் ராணுவ வீரர்கள் 22 லட்சம் பேர் , 6 லட்சம் கணவனை இழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகள் பயன்பெறுவர்.

பிரதமருடன் அமைச்சர் சந்திப்பு : இதற்கிடையே மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் , பிரதமரை இன்று சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...