அடிக்கடி நடக்கும் விபத்துகள் ஆசிரியர்கள் சாலை மறியல்

பள்ளி அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறி, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நெற்குன்றம் பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில், மாலா, ௪௫, என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர்
நேற்று காலை, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார்.பள்ளி அருகே சென்றபோது, அவர் பின்னால் வந்த மாநகர பேருந்து மோதி, தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தோர் உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த மற்ற பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அருகே இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும், அங்கு, ஒரு போக்குவரத்து காவலரை பணியில் ஈடுபடுத்த கோரியும் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. நெற்குன்றம் போலீசார் ஆசிரியர்களிடம் பேசி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின், மறியல் கைவிடப்பட்டது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...