சென்னை பல்கலை. பேராசிரியர் மீது அடுக்கடுக்கான புகார்கள்:விசாரணைக் குழு அறிக்கையில் நிரூபணம்?

பல்கலைக்கழகத்தில் நிர்வாக நடவடிக்கைக்கு ஆளான அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும், விசாரணைக் குழு அறிக்கையில் அவை நிரூபணமாகியிருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

 இந்த அறிக்கையின் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே, மாணவர்களைத் திசைதிருப்பி போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக அவர் மீது பல்கலைக்கழகத்தின் பிற பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 ராமு மணிவண்ணன், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அரசியல் அறிவியல் துறையின் பொறுப்புத் தலைவராகப் பணியாற்றி வந்தார். ஆனால், கடந்த 7-ஆம் தேதி துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத் முழு அதிகார துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 பல்கலைக்கழக வளாகத்தில் மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தத் துறை மாணவர்களின் விவரங்களை நிர்வாகம் கேட்டும், ராமு மணிவண்ணன் கொடுக்க மறுத்ததே பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்குக் காரணம் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
 மாணவர்களும் இதே கருத்தை முன்வைத்து, அவரை மீண்டும் துறைத் தலைவர் பதவியில் நியமிக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த நிலையில், பேராசிரியர் மீதான நடவடிக்கைக்கு மாணவர்களின் போராட்டம் காரணமல்ல, அவர் மீது பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் பல்வேறு குற்றச்சாட்டுகளே காரணம் என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
 காரணம் என்ன? பேராசிரியர் ராமு மணிவண்ணன் மீது 27 புகார்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகார்களின் உண்மை நிலையைக் கண்டறிய, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.பாலமலை தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவை பல்கலைக்கழகம் அண்மையில் நியமித்தது.
 இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதில் பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார்களில் 10 புகார்கள் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், 3 புகார்கள் ஓரளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 14 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை இரு வாரங்களுக்கு முன் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவரங்கள் வெளியிடப்படாமல், முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இருந்தபோதும், மீண்டும் இந்த அறிக்கை ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.
 இந்தப் பிரச்னையைத் திசை திருப்பவே பேராசிரியர் ராமு மணிவண்ணன் மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார் என்று பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 பல்கலைக்கழக நடவடிக்கை சரியானதே: இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் பேரவை வெளியிட்ட செய்தி:
 சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத்துக்கு தாற்காலிகமாக வேறு பொறுப்பு கொடுக்கப்பட்டதால், துறையில் இணைப் பேராசிரியராக ராமு மணிவண்ணனுக்கு துறைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
 இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத் ஓய்வு பெற உள்ளதால், தனது தாய்த் துறைக்குத் திரும்பி உள்ளார். மூத்த பேராசிரியர் என்ற அடிப்படையிலேயே துறைத் தலைவர் பொறுப்பு அவருக்கு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தின் சரியான நடவடிக்கையே.
 இந்த நிலையில், உள்நோக்கத்தின் அடிப்படையிலும், பழிவாங்கும் நோக்கிலும் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறுவது முற்றிலும் தவறானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிமன்றக் குழு அனுமதி பெறாமலே விசாரணை: பேரா. ராமு மணிவண்ணன்

தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அறிய, ஆட்சிமன்றக் குழு அனுமதி பெறாமலே விசாரணைக் குழுவை பல்கலைக்கழகம் அமைத்ததாக பேராசிரியர் ராமு மணிவண்ணன் புகார் கூறினார்.
 சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல், பொது நிர்வாகத் துறை பொறுப்புத் தலைவராக இருந்த ராமு மணிவண்ணன் கடந்த 7-ஆம் தேதி, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டி:
 பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி அமைதியான முறையில் மாணவர்களுடன் சேர்ந்து நான் போராட்டங்களில் ஈடுபட்டேன். இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவதால் என் மீது பல்வேறு பொய்ப் புகார்கள் கூறப்படுகின்றன.
 இந்தப் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு நபர் குழுவை பல்கலைக்கழகம் அமைத்தது. ஆனால், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு அனுமதி பெறாமலே குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் எனது கருத்தையும் பதிவு செய்ய கோரினேன். அது மறுக்கப்படவே, எனது வழக்குரைஞருடன் அந்த விசாரணையிலிருந்து வெளியேறிவிட்டேன். அதன் பிறகு அவர்களாகவே விசாரணை அறிக்கையைத் தயார் செய்து அளித்திருக்கின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் மது விலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களுடைய விவரங்களை அளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதைத் தர மறுத்துவிட்டேன்.
 அதற்குப் பழிவாங்கும் வகையில் என் மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னை தாற்காலிகப் பணி நீக்கம் செய்வதற்கான முயற்சியை பல்கலைக்கழகம் இப்போது எடுத்து வருகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால், நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என்றார்.
 இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அரசு, பேராசிரியர் சிவகுமார், சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல், பொது நிர்வாகத் துறை மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...