சிறையில் ஆசிரியர் பணியிடம் செப்., 18ல் நேர்காணல்!

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியருக்கான நான்கு பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி வெளியிட்ட அறிக்கை: கோவை மத்திய சிறையில், காலியாக உள்ள நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்புடன், இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொதுப்போட்டி, இன சுழற்சி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32 வயதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு, 35 வயது 2015 (ஜன.,1ன்படி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகுதிகள் உடையவர்கள், உரிய கல்விச்சான்றிதழ், முன் அனுபவம்-ஜாதி-முன்னுரிமைச் சான்றிதழுடன், வரும் 18ம் தேதி காலை, 11:00 மணியளவில், கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர், முன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ப

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...