ஆசிரியர் தினத்தை ஒட்டி நெல்லை மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

தொடர்ந்து நடந்த விடீயோ கான்பரன்சிங் நிகழ்ச்சயில் நெல்லை மாணவி விசாலினி கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெற்ற விழாவில் ராதாகிருஷ்ணனின் உருவம் பதிக்கப்பட்ட நினைவு நாணயத்தையும், மாணவர்களின் திறமையை வளர்க்கும் கலாஉற்சவம் என்ற
இணையதளத்தையும் துவக்கி வைத்த பிரதமர் மோடி 600 ஆசிரியர்கள், 800 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரது சேவை என்றும் மறக்க முடியாதது. அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்நன்னாளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கலந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் . ஆசிரியர் பணி மகத்தானது. வாழ்நாளி்ல் எந்தவொரு மனிதனும், ஆசிரியர் மற்றும் தாய், தந்தையரை விட்டு விலகி செல்ல முடியாது. எல்லோரும் இதனை உணர முடியும். அதிலும் பெற்றோரை விட ஆசிரியர்களுடனே மாணவ, மாணவிகள் அதிக நேரம் இருக்கின்றனர்.

ஆசிரியர்கள் தான் டாக்டர்கள், இன்ஜினியர், விஞ்ஞானி போன்றோரை உருவாக்குகின்றனர். இருப்பினும் ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் குறைபாடு உள்ளது. எனது அரசாங்கம் ஆசிரியர்களை கவுரப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.ஆசிரியர்களுக்கு ஓய்வு கிடையாது. ஆசிரியர்கள் அனைவரது வாழ்விலும் ஒளியை ஏற்றக்கூடியவர்கள். இவ்வாறு மோடி பேசினார்.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமரிடம் கேள்வி கேட்டு பதில் பெற்றனர்.

வெற்றி பெற்ற அரசியல்வாதியாக திகழ நமக்கு என்ன தகுதி வேண்டும்?


தலைமை பொறுப்பை நாம் ஏற்க நம்மை தலைசிறந்தவர்களாக்கி கொள்ள வேண்டும். அரசியல் வாதிகள் குறித்த கருத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் சேவை செய்ய வருவோர் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. மக்கள் பாதிக்கப்படும் போது சிறந்த முடிவுகள் எடுக்கும் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் அச்சப்படுகின்றனர். நான் நூலகம் சென்ற போது அதிகம் விவேகானந்தர் புத்தகத்தை படிப்பேன் அது என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

நான் படித்த பள்ளி ஒரு சிறிய கிராமத்தில் இருந்தது. இதனால் எனக்கு அங்கு நவீன விளையாட்டு ஏதுமில்லை. அரசியல்வாதி விளையாட்டை நாம் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளோம்.

ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் பெரும் சவால்களை சந்தித்துள்ளதா?

சுகாதாரம் பாதுகாப்பதில் இந்த திட்டத்திற்கு திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மீடியாக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உதவி புரிகின்றன.

பிரதமர் மோடியிடம் நெல்லை மாணவி விசாலினி கேள்வி:

முதலில் மாணவி விசாலினி பிரதமருக்கு தமிழில் வணக்கம் என தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி உடனே வணக்கம் என பதிலுக்கு உரைத்தார்.

நான் நாட்டிற்காக சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறந்த வழி எது?

நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர வேண்டும்,அரசியலுக்கு வரவேண்டும் என்பதில்லை. சிறிய, சிறிய வழியில் பணியாற்ற முடியும். சிறு, சிறு பங்களிப்பு மூலம நாட்டிற்கு சேவையாற்ற முடியும். மின்சாரம் , பெட்ரோல், உணவு சேமிப்பு,தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். இதுவே ஒரு சேவைதான் என பதிலளித்தார்.

திருநெல்வேலி ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக்., பள்ளி மாணவி விசாலினி, பள்ளியில் படித்தபடியே 15 வயதில் பி.டெக்.,முதலாமாண்டு படித்து வருகிறார். சராசரி மனிதனுக்கு 90 புள்ளிகள் நுண்ணறிவு திறன் இருக்க வேண்டும். ஆனால் விசாலினி 263புள்ளிகள் நுண்ணறிவு திறன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...