தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலையை உயர்த்த இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் விடுத்த ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில்,
இந்தியாவில் ஆசிரியர் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகத்திற்கு ஏற்றம் தரும் ஏணியாக திகழும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இந்த நிலையை மாற்றி ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தரமான, தமிழ் மொழி வழிக் கல்வியை வழங்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.