10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:-

 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 24 முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
 இந்நிலையில், இந்த மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 2 முதல் 9-ஆம் தேதி வரை தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
 அதன் பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...