மாணவர்கள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் ஆலோசனை வழங்குவதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதி அறிவித்துள்ளார்.
தொட்டில் குழந்தைகள்
தமிழக சட்டசபையில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர் பா.வளர்மதி பதிலளித்துப் பேசியதாவது:-
சாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக 1992-ம் ஆண்டில் தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது 150 பெண் குழந்தைகள் அதில் சேர்க்கப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை 853 ஆண் குழந்தைகள் உட்பட 4 ஆயிரத்து 764 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் முன்பு சேர்க்கப்பட்ட பலர் இன்று டாக்டர், என்ஜினீயராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்தை குஜராத் உட்பட வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் தொகுப்பு
அதைத் தொடர்ந்து அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-
தமிழ்நாட்டில் அங்கன்வாடி குழந்தைகள், அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மற்றும் காப்பகங்களிலுள்ள குழந்தைகள், இடைநிறுத்தல் செய்த குழந்தைகள், இளைஞர் நீதி சட்டத்தின் கீழுள்ள குழந்தை கவனிப்பு மையங்கள், திறந்தவெளிப் புகலிடங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மறுவாழ்வு பெற்ற குழந்தைகள் ஆகிய சமுதாயத்திலுள்ள அனைத்துப்பிரிவு குழந்தைகளையும் கண்காணித்து பாதுகாக்கும் நோக்கத்தில் ரூ.13.34 லட்சம் செலவில் மாநில அளவிலான குழந்தைகள் குறித்த தகவல் தொகுப்பு ஏற்படுத்தி ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.
அகன்ற அலைவரிசை
குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் குறித்தான பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் மாநில மற்றும் மத்திய அரசிற்கு தெரிவிக்க வேண்டியுள்ளது. எனவே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலகங்களை மேம்படுத்துவதற்கு ஏதுவாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் மூலமாக 434 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகங்களுக்கு அகன்ற அலைவரிசை இணைய தொடர்பு ரூ.53.93 லட்சம் செலவில் வழங்கப்படும்.
சமூக நல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 26 அரசு குழந்தைகள் காப்பகங்களில் 3 ஆயிரத்து 32 குழந்தைகளும், 6 அரசு சேவை இல்லங்களில் 843 பெண்கள் மற்றும் குழந்தைகளும் தங்கியுள்ளனர். இவர்களை கண்காணித்து பாதுகாப்பதற்கு வசதியாக அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா கருவிகள் ரூ.50.40 லட்சம் செலவில் பொருத்தப்படும்.
வாசலில் கேமராக்கள்
அனைத்து குழந்தைகள் காப்பகங்களின் நுழைவு மற்றும் வெளிவாயிலில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், சென்னை, ராணிப்பேட்டை, விழுப்புரம், தஞ்சாவூர், காரைக்குடி, மல்லிப்புதூர், தட்டப்பாறை, பஞ்சப்பள்ளி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லங்களிலும்;
சேலம், திருச்சி, நெல்லையில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லங்களிலும், திருச்சி, சேலம், மதுரை, கோவையில் உள்ள அரசினர் மகளிர் காப்பகங்களிலும்;
வேலூரில் உள்ள அரசினர் வரவேற்பு இல்லம், அரசினர் மகளிர் பிற்காப்பு நிறுவனம், அரசினர் ஆடைகள் செய்யும் பயிற்சி நிறுவனம், ஆத்தூர் மற்றும் மதுரையிலுள்ள அரசினர் மாணவர் பிற்காப்பு நிறுவனங்கள் ஆகிய 21 இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ரூ.32 லட்சம் செலவில் கேமராக்கள் பொருத்தப்படும்.
சமூகப் பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ் உள்ள 32 மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரூ.16 லட்சம் செலவில் மடிக்கணினி (லாப்டாப்) வழங்கப்படும்.
தற்கொலை தடுப்பு
வளரிளம் பருவத்திலுள்ள மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில், மாவட்டந்தோறும் 100 நபர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு, தேர்வுகளுக்கு மூன்று மாதங்கள் முன்பும், தேர்வுகள் முடிந்து 3 மாதங்கள் பின்பும் ஆலோசனை வழங்கப்படும்.
தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள், மனச்சோர்வு மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ள மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நல்வழிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 100 பேருக்கும் பயிற்சி அளிப்பதற்காக ரூ.22.40 லட்சம் செலவிடப்படும்.
மாற்றுத்திறனாளிகள்
பஸ் நிலையங்களில் நிற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கான பஸ்கள் வருவதற்கான அறிவிப்பை அறிவதற்காக, ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவி பொருத்தப்படும். இந்தத் திட்டம் முதலில் சென்னையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அடிக்கடி பயணிக்கும் 75 அரசு பஸ் வழித்தடங்களில் ஒலி எழுப்பும் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் அரசு நிதியுதவி ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத் தொகை உயர்த்தப்பட்டதால், அதிகப்படியான மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள், வங்கிகளால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மானியத் தொகையை ரூ.80 லட்சத்தில் இருந்து ரூ.1.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 400 மாற்றுத்திறனாளிகள் பயன்அடைவர்.