தகவல் தொடர்பு துறையில் (ஐ.டி.,) ஆண்களை விட பெண்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள்.சமீபத்தில் ஐ.டி., துறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் வாங்கும் சம்பளம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தான் இந்த தகவல் தெரிய வந்தது.
டில்லியில் பெண்கள் வேலைக்கு சேர்ந்தது முதல் 3 ஆண்டுகளுக்குள் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 9.8 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் ஆண்கள் பெறும் சம்பளம் ரூ.9.5 லட்சம் மட்டுமே. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேல் செல்லும்போது, பெண்களை விட, ஆண்களின் சம்பளம் கூடி விடுகிறது.
ஐதராபாத்திலும் இதே நிலைமை தான். அங்கு இதே காலகட்டத்தில் பெண்களின் சராசரி சம்பளம் ஒரு ஆண்டுக்கு ரூ.9.7 லட்சமாக இருக்கிறது. ஆண்களின் சம்பளம் ரூ.9.4 மட்டுமே. இவர்களின் அனுபவம் 7 முதல் 10 ஆண்டுகளை எட்டும்போது தான் இருவரது சம்பளமும் சமமாக இருக்கிறதாம்.
மும்பை, சென்னை, பெங்களூருவில் இருவரும் சமமான சம்பளத்தில் தான் ஆரம்பிக்கின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க பெண்களை விட, ஆண்களின் சம்பளம் கூடுகிறது.
ஐஐஎம்ஜாப்ஸ் என்ற வேலைவாய்ப்பு இணையதளம், நாடு முழுவதும் ஒரு லட்சம் ஐ.டி., பணியாளர்களிடம் ஆன்லைனில் நடத்திய ஆய்வில் தான் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.