சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க, கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு
முதல், பிஎச்.டி., மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை யிலான மாணவர்கள், 25ம் தேதிக்குள், விண்ணப்பங்களை கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், 9ம் வகுப்பு முதல், பிஎச்.டி., மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள், ஆன்-லைனில் (இணையத்தில்) விண்ணப்பிக்க www.scholarships.gov.in என்ற இணையதள முகவரில், அக்., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.